ஜனநாயகனுக்கு ஆதரவாக ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு


ஜனநாயகனுக்கு ஆதரவாக ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு
x

'ஜனநாயகன்' படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னை,

நடிகர் விஜய், நடிகைகள் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தீர்ப்பை பொறுத்தே படம் எப்போது வெளியாகும் என்பது தெரியவரும்.

'ஜனநாயகன்' படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திரைப்பிரபலங்களும் கலைக்குள் அரசியல் நுழையக்கூடாது என்று 'ஜனநாயகன்' படம் தொடர்பாக ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: வலிமையான இந்திய அரசு சாதாரணமான ஒரு படத்துக்கு எதிராக சண்டையிடுவது ரொம்பவே அவமானம் ” எனப்பதிவிடுள்ளார். பிசி ஸ்ரீராமின் இந்த பதிவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வரும் விஜய் ரசிகர்கள், திமுக மற்றும் பாஜகவை விஜய் கடுமையாக அரசியல் களத்தில் எதிர்ப்பதால்தான், அவரது படம் வெளியாவதில் வேண்டும் என்றே இடையூறு செய்யப்படுகிறதா? ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1 More update

Next Story