'என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது...'- அடுத்த படத்தை அறிவித்த மோகன்லால்


Close to my heart...: Mohanlal announces new film with Anoop Menon
x

மோகன்லால், பிருத்விராஜ் இயக்கத்தில் 'எம்புரான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த 'பரோஸ்' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து மோகன்லால், பிருத்விராஜ் இயக்கத்தில் 'எம்புரான்' படத்திலும், நந்தா கிஷோர் இயக்கிய "விருஷபா" படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த நிலையில், மோகன்லால் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை மோகன்லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், 'எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருவனந்தபுரம், கொல்கத்தா மற்றும் ஷில்லாங்கில் விரைவில் படமாக்கப்படவுள்ளது. அனூப் மேனன் எழுதி இயக்கும் இப்படத்தை டைம்லெஸ் மூவீஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story