ஜூலை 4ல் வெளியாகிறது கோப்ரா படத்தின் 'உயிர் உருகுதே' பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘உயிர் உருகுதே’ பாடல் ஜூலை 4ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜூலை 4ல் வெளியாகிறது கோப்ரா படத்தின் 'உயிர் உருகுதே' பாடல்
Published on

சென்னை,

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார். கோப்ரா திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது.இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கோப்ரா படத்தின்  'உயிர் உருகுதே' பாடல் ஜூலை 4ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com