முதலீட்டை விட 79 மடங்கு வசூல்... ‘அப்செஷன்’ படைத்த பிரம்மாண்ட சாதனை

இந்த திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் ரூ.4,780 கோடி வசூல் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதலீட்டை விட 79 மடங்கு வசூல்... ‘அப்செஷன்’ படைத்த பிரம்மாண்ட சாதனை
Published on

குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வசூலை குவித்த ஹாலிவுட் திரைப்படமாக ‘அப்செஷன்’ சாதனை படைத்துள்ளது. வெறும் ரூ.60 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் ரூ.4,780 கோடி வசூல் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வசூலில் புதிய சாதனை

கறி பார்கர் இயக்கியுள்ள இப்படம் கடந்த மே 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘அப்செஷன்’ படத்தில் இண்டி நவரெட்டே, மைக்கேல் ஜான்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், தற்போது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,780 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலீட்டை விட பல மடங்கு வசூல்

குறிப்பாக, 1 மில்லியன் டாலருக்கும் குறைவான பட்ஜெட்டில், அதாவது சுமார் ரூ.60 கோடி செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ரூ.4,780 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் படத்தின் முதலீட்டை விட சுமார் 79 மடங்கு அதிகமாக வசூல் கிடைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் ‘அப்செஷன்’ புதிய சாதனையை படைத்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு இந்த சாதனை ‘எலிமென்டல்’ உள்ளிட்ட படங்களின் வசம் இருந்த நிலையில், தற்போது ‘அப்செஷன்’ அந்த சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த படத்தை இயக்கும் கறி பார்கர்

‘அப்செஷன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கறி பார்கருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில், அவர் அடுத்ததாக ‘எனிதிங் பட் கோஸ்ட்ஸ்’ (Anything But Ghosts) என்ற திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com