சித்தார்த்தின் '3 பிஎச்கே' - ரிலீஸ் தேதி அறிவிப்பு


Come and experience the story of our family in theaters on July 4th
x

இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் யூ'. என்.ராஜசேகர் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் தனது 40-வது படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு '3 பிஎச்கே' என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story