கோலாகலமாக நடைபெற்ற காமெடி நடிகர் கிங்காங் மகள் திருமணம்


கோலாகலமாக நடைபெற்ற காமெடி நடிகர் கிங்காங் மகள் திருமணம்
x
தினத்தந்தி 10 July 2025 2:48 PM IST (Updated: 10 July 2025 5:02 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அசோக் பில்லர் பகுதியில் நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் நடைபெற்றது.

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்குப் பெயர்போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிங்காங். இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர்.

நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கயல் தேவராஜ், முத்துக்காளை உள்ளிட்ட நடிகர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக தனது மகள் திருமணத்திற்காக முன்னணி நடிகர்கள் பலருக்கும் கிங்காங் அழைப்பு விடுத்து இருந்தார். சிவகார்த்தியேகன், விஜய் சேதுபதி, விஷால் என திரைநட்சத்திரங்கள் பலருக்கும் கிங்காங் நேரில் அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story