காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு தீவிர சிகிச்சை

இந்தி திரையுலக காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து காணப்படுகிறது.
காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு தீவிர சிகிச்சை
Published on

புதுடெல்லி,

இந்தி திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). இவர் கடந்த 10-ந்தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்து உள்ளார். அப்போது, திடீர் என அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நடிகர் ராஜூவின் சகோதரர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் சுய நினைவுடன் உள்ளார் என கூறினார்.

எனினும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு அடுத்த நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என கூறப்பட்டது. அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலையில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உறவினர் கூறினார்.

இந்நிலையில், தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டரிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என நெருங்கிய வட்டாரம் தெரிவித்து உள்ளது. அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து கவனித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com