மீண்டும் காமெடி வேடம்: சந்தானம் நடிக்க விரும்பும் 2-ம் பாகம்

நடிகர் சந்தானம் மீண்டும் மற்ற கதாநாயகர்கள் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவின.
மீண்டும் காமெடி வேடம்: சந்தானம் நடிக்க விரும்பும் 2-ம் பாகம்
Published on

தமிழ் திரையுலகில் விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்து 10 வருடங்களுக்கு மேலாக கொடி கட்டி பறந்தவர் சந்தானம்.

தொடர்ந்து அறை எண் 305-ல் கடவுள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்து பின்னர் முழு நேர கதாநாயகனாகி விட்டார். மற்ற கதாநாயகர்கள் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க அழைப்புகள் வந்தும் மறுத்துவிட்டார்.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் குவிக்கவில்லை. இதனால் மீண்டும் மற்ற கதாநாயகர்கள் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவின. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்யாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ''காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு கதாநாயகன் ஆனதும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தேன். ஆனால் ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் நிச்சயம் நடிப்பேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com