மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி

மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி கூறி உள்ளார்.
மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி
Published on

சென்னை

நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து மீடூ புகார்களை தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டு வந்தார். தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீது புகார்களைத் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி. ஆனால் நடிகை ஸ்ரீரெட்டி விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் இப்புகார்களை மறுத்தனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியதாவது;-

எனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. என் பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். எனக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் மீது பெரிய மாரியாதை உண்டு.

என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது. எனது பெயரில் ஃபேஸ்புக்கில் போலியான கணக்குகள் உள்ளன. இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். என் பெயரை வைத்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com