சன்னிலியோனுடன் ஒப்பிட்டு அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்

அமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
சன்னிலியோனுடன் ஒப்பிட்டு அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
Published on

ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர். எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

அமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார். இந்த நிலையில் அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.

அதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com