"அனிருத்துக்கு போட்டியா?" - ஓபனாக பேசிய சாய் அபயங்கர்

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
"Competition for Anirudh?" - Sai Abhyankkar speaking openly
Published on

சென்னை,

''பல்டி'' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ''அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே?'' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

''அனிருத்தெல்லாம் நிறைய பண்ணிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதத்தால் இன்னும் நல்லா வேலை செய்ய வேண்டுமே தவிர போட்டிலாம் எதுவும் இல்லை. இன்னும் எவ்வளவோ இருக்கிறது'' என்றார்.

''பல்டி''யை அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கி இருக்கிறார். அல்போன்ஸ் புத்ரன், சாந்தனு பாக்யராஜ், ஷேன் நிகம், பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது.

இது மட்டுமில்லாமல், கருப்பு, டியூட், அல்லு அர்ஜுன்-அட்லீ படம் ஆகிய படங்களுக்கும் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com