வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்

தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா.
வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்
Published on

தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா. இவர் இந்தி, தெலுங்கு படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். நிலா மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் புதிய வீடு வாங்கி இருக்கிறார். இந்த வீட்டில் உள் அலங்கார வேலைகளை செய்ய இண்டீரியர் டிசைனர் ராஜிந்தர் என்பவரிடம் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொடுத்து விட்டு பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்புக்கு சென்று விட்டார். 15 நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து புதிய வீட்டை பார்த்து தரம் குறைந்த மலிவான பொருட்களை வைத்து உள் அலங்கார வேலைகள் செய்து இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் நிலாவுக்கும், உள் அலங்கார நிபுணருக்கும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதுகுறித்து நிலா கூறும்போது, தரம் குறைந்த பொருளில் உள் அலங்காரம் செய்து இருப்பதை பற்றி நான் கேட்டபோது, என்னை எனது வீட்டில் இருந்தே வெளியே தள்ளி விட்டு இப்படி கேள்வி கேட்டால் வேலை செய்ய மாட்டேன் என்று மிரட்டினார். மேலும் மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார் என்றார். இதுகுறித்து மும்பை போலீசில் ராஜிந்தர் மீது நிலா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com