“கே டி: தி டெவில்” படத்தின் பாடல் சர்ச்சை விவ​காரம் - நடிகை நோரா பதேஹிக்கு எதிராக புகார்

துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி நடித்துள்ள ‘கேடி தி டெவில்’ திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகிறது.
“கே டி: தி டெவில்” படத்தின் பாடல் சர்ச்சை விவ​காரம் -  நடிகை நோரா பதேஹிக்கு எதிராக புகார்
Published on

கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா பதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

துருவ் சார்ஜாவின் ‘கேடி தி டெவில்’ படத்தின் ‘திற நீ எந்தன்’ பாடல் வெளியானது. இப்​படத்​திலிருந்து இந்​தி​யில் வெளி​யான குத்​துப்​பாடல் சர்ச்​சை​யில் சிக்​கியது. அப்​பாடலில் நோரா பதேஹி, சஞ்​சய் தத் ஆடி​யிருந்​தனர்.

இதில், ஆபாச​மான வார்த்​தைகள் இருப்​ப​தாக கடும் கண்​டனங்​கள் எழுந்​ததை அடுத்து தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் தயாரிப்பு நிறு​வனத்​துக்கு நோட்​டீஸ் அனுப்​பியது. இதையடுத்து யூடியூப் தளத்​தில் இருந்து இப்​பாடல் நீக்​கப்​பட்​டது. இயக்​குநர் பிரேம், மன்​னிப்​புக்கேட்டு வீடியோ ஒன்றை வெளி​யிட்​டார்.

இதுபற்​றிய பேசிய கர்​நாடக பிலிம் சேம்​பர் தலை​வர் ஜெய​மாலா, “அந்த சர்ச்​சைப்​பாடல் குறித்து பேசுவதற்​காக பிரேம், தயாரிப்​பாளரை அழைத்​திருந்​தோம். இரு​வரும் கலந்​து​கொள்ள இயல​வில்​லை. அவர்​கள் தரப்​பில் பேசியவர்​கள், பாடல் வரி​கள் விரை​வில் மாற்​றப்​படும் என்று உறு​தி​யளித்​தனர். அந்​தப் பாடல் ஏற்​கெனவே பல்​வேறு தளங்​களி​லிருந்து நீக்​கப்​பட்​டு​விட்​டது” என்​றார்.

இதற்​கிடையே கனடாவைச் சேர்ந்த, நோரா பதேஹி இந்​தி​யாவில் தங்​கிப் பணி​யாற்​று​வதற்​கான, பணி அனு​மதி தொடர்​பாகப் புதிய சட்​டச் சிக்​கல்​ எழுந்​துள்​ளது. இந்​தி​யா​வில் தங்​குவதற்​கான சலுகைகளை அவர் தவறாகப் பயன்​படுத்​தி​யதாகக் குற்​றம் சாட்​டி​யுள்ள வழக்​கறிஞர்​கள் குழு ஒன்​று, இது தொடர்​பாக உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு மத்​திய உள்​துறை அமைச்​சகத்​துக்​குக் கடிதம் எழு​தி​யுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அவர் நடிகை மட்​டுமே, அவருக்​கும் பாடல் வரிக்​கும் தொடர்​பில்லை என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்​துகள் எழுந்​துள்​ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com