

கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 3 தெலுங்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார். படப்பிடிப்பில் கேரவன் கேட்டு படக்குழுவினரை தொல்லை செய்வதாக அனுபமா பரமேஸ்வரன் மீது புகார் கிளம்பி உள்ளது.