மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்..!

இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டார்.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்..!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். கடந்த 2008 ஆம் ஆண்டு இமான், மோனிகா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிளெசிகா கேத்தி, வெரோனிகா டோரத்தி என்ற 2 குழந்தைகள் உள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் இமான் மற்றும் மோனிகா இருவரும் விவாகரத்து செய்வதாக சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துகொண்டுள்ளார். பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com