பாராட்டுக்கள் நண்பா ..! கமல்ஹாசன் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி பதிவு

சிரஞ்சீவி, கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து கெளரவப்படுத்தியுள்ளார்.
பாராட்டுக்கள் நண்பா ..! கமல்ஹாசன் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி பதிவு
Published on

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 3 தினங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து விக்ரம் திரைப்படம் சாதனை படைத்தது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி, கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து கெளரவப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், , எனது அன்பான பழைய நண்பரைக் கொண்டாடி கௌரவிக்கிறேன் விக்ரமின் அற்புதமான வெற்றிக்காக, என் அன்புக்குரிய சல்மான் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் குழுவினருடன். தீவிரமான & த்ரில்லான படம் .பாராட்டுக்கள் நண்பா என தெரிவித்துள்ளார் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com