ஓடிடியில் வெளியாகும் கான்ஜூரிங் கண்ணப்பன்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் கான்ஜூரிங் கண்ணப்பன்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
Published on

சென்னை,

அறிமுக டைரக்டர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகிய இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வருகிற 5ம் தேதி 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரையரங்கில் வெளியாகி வெற்றியை பதிவு செய்த இந்த படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com