போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? - நடிகர் நவ்தீப் விளக்கம்

போதை பொருள் விவகாரத்தில் நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது
போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? - நடிகர் நவ்தீப் விளக்கம்
Published on

ஐதராபாத்தில் சமீபத்தில் வெளியான போதை பொருள் விவகாரம் தெலுங்கு பட உலகை உலுக்கியது. இதில் தொடர்பு இருப்பதாக சில நைஜீரிய இளைஞர்கள் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போதை பொருள் விவகாரத்தில் நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. நடிகர் நவ்தீப் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய தேடி வருகிறோம் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்து இருந்தார்.

நடிகர் நவ்தீப் புகைப்படத்துடன் இந்த தகவல் வலைதளங்களில் பரவியது. இதற்கு நவ்தீப் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் எங்கேயும் தப்பி ஓடவில்லை. ஐதராபாத்தில்தான் இருக்கிறேன். இந்த போதை பொருள் வழக்குக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதை பொருள் வழக்கில் தேடப்படும் நபர் நான் இல்லை. தயவு செய்து உண்மையான தகவலை வெளியிடுங்கள்'' என்றார். இதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நவ்தீப், தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்து பிரபலமானவர். நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com