தங்க கடத்தலில் தொடர்பு: மலையாள நடிகர்கள் மீது பட அதிபர் புகார்

தங்க கடத்தலில் தொடர்பு உள்ளதாக, மலையாள நடிகர்கள் மீது பட அதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தங்க கடத்தலில் தொடர்பு: மலையாள நடிகர்கள் மீது பட அதிபர் புகார்
Published on

கேரளாவில் புயலை கிளப்பிய தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான பாசில் பரீத் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பி ஓடி விட்டார். தங்க கடத்தலில் மலையாள திரையுலகை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரபல மலையாள தயாரிப்பாளரும் கேரள திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவருமான சியாத் கோகர் கூறும்போது, தங்க கடத்தலில் வந்த பணம் மலையாள சினிமா துறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பாசில் பரீத் தங்க கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரான மலையாள படங்களில் முதலீடு செய்துள்ளார். சில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்க கடத்தல் பணம் மூலம் பயன் அடைந்துள்ளனர். தங்க கடத்தல் மூலம் வந்த பணம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தங்க கடத்தலில் மலையாள பட உலகினருக்கு உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com