விஜய்க்கு தொடர்ந்து வரும் எதிர்ப்பு...திருப்பாச்சி நடிகர் சொன்ன பதில்

விஜய்க்கு தொடர்ந்து வரும் எதிர்ப்பு குறித்து திருப்பாச்சி நடிகர் பெஞ்சமின் பேசியுள்ளார்.
Continual opposition to Vijay...Thirupachi actor's answer
Published on

சென்னை,

அரசியல் கட்சி தொடங்கி, சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு தொடர்ந்து எதிர்ப்பு வரும்நிலையில், திருப்பாச்சி நடிகர் பெஞ்சமின் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில்,

'விஜய் எதை தொட்டாலும் அது வெற்றிதான். என்னை சினிமாவில் வாழ வைத்த தெய்வம் விஜய்சார். திருப்பாச்சி படத்தின் மூலம் என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தவர் அவர். ஒருவர் புதிதாக கட்சி தொடங்கினால் அதற்கு எதிர்ப்பு வரதான் செய்யும். அதையெல்லாம் தாண்டி வருபவர்கள்தான் வெல்கிறார்கள். தமிழ் நாட்டில்தான் இந்த மாதிரி நடக்கிறது. மற்ற எங்கும் இப்படி கிடையாது. கண்டிப்பாக விஜய் சார் வெல்வார்.

விஜய் சார் சாதாரணமாக ஒரு விஷயத்தை கையில் எடுக்க மாட்டார். இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர், அதையெல்லாம் விட்டுவிட்டு பொது சேவைக்கு வருகிறார் என்றால், அவருக்கு பின்புலமும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது. மக்கள்தான் அவரது பின்புலம். சினிமாவில் எப்படி வென்றாரோ, அதேபோல அரசியலிலும் வெல்வார்.

அவருடன் சுமார் 190 நாட்கள் பணியாற்றி இருக்கிறேன். அவர் மனதில் ஒன்று நினைத்துவிட்டார் என்றால் அதிலிருந்து பின்வாங்கமாட்டார். . சிறு வயது குழந்தைகளின் மனதில் இடம் பிடிப்பவர்கள்தான் அரசியலில் வெல்வார்கள். எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு விஜய்தான் சிறு வயது குழந்தைகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். நிச்சயம் அரசியலில் வெல்வார். இதை நான் அவருடன் நடித்ததால் சொல்லவில்லை. ஒரு பொதுமக்களாக சொல்கிறேன்,' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com