சிரஞ்சீவி-நயன்தாரா படத்தில் வில்லனாக ’குட் பேட் அக்லி’ நடிகர்?

இந்த படத்தில் கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை,
சிரஞ்சீவி தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் மன சங்கர வர பிரசாத் கரு படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். படத்தின் முதல் பாடலான மீசால பில்லாவின் புரோமோ நேற்று வெளியானநிலையில், முழு பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி, நானியின் தசரா மற்றும் ஜூனியர் என்டிஆரின் தேவரா ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் கேத்தரின் தெரசா மற்றொரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். இந்த படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைகளில் வெளியாக உள்ளது.






