ராவணன் பற்றி சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்ட சயீப் அலிகான்

பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ராமாயணத்தை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்கிறார்.
ராவணன் பற்றி சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்ட சயீப் அலிகான்
Published on

3டி தொழில்நுட்பத்தில் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். சயீப் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராவணன் சீதையை கடத்தியதில் உள்ள நியாயத்தை எனது கதாபாத்திரம் பிரதிபலிக்கும் என்றார். இது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி சயீப் அலிகானுக்கு எதிர்ப்பு கிளம்பியது. சீதையை ராவணன் கடத்தியது தவறு. அதில் நியாயம் எதுவும் கிடையாது என்று பா.ஜனதா கட்சியினரும், இந்து அமைப்புகளும் கண்டித்தன. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சயீப் அலிகான் வெளியிட்ட அறிக்கையில் எனது கருத்தை திரும்ப பெறுகிறேன். எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். ராமர்தான் நியாயத்துக்கும், வீரத்துக்கும் உதாரணம். அவர் எனது ஹீரோ. ஆதிபுருஷ் படம் தீயசக்தியை தோற்கடித்து வெற்றியை கொண்டாடும் படம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com