சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் கணவருடன் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.
சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்
Published on

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2020-ல் கவுதம் என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு திருமண நாளை கொண்டாடினார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் கணவருடன் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த படத்தின் கீழ் இந்த பண்டிகையை உங்களுக்கு பிடித்தமானவரோடு மதுபானத்துடன் கொண்டாடுங்கள். தீபாவளி விருந்துக்கு பொருத்தமான மதுபானம் இது. இந்த பதிவு 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்.

அவரது கையில் சூதாட்டம் ஆடும் சீட்டு கட்டும் உள்ளது. இந்த புகைப்படம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. காஜல் அகர்வால் மதுவை விளம்பரபடுத்தவும் ரசிகர்களை மதுகுடிக்க தூண்டவும் செய்கிறார் என்று வலைத்தளத்தில் பலரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது. காஜல் அகர்வால் நடித்துள்ள ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com