சர்ச்சை காட்சிகள்: யோகிபாபு படத்துக்கு நோட்டீஸ்

சர்ச்சை காட்சிகள் தொடர்பாக, நடிகர் யோகிபாபுவின் படத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்ச்சை காட்சிகள்: யோகிபாபு படத்துக்கு நோட்டீஸ்
Published on


தமிழ் பட உலகில் யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக மாறி உள்ளார். தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது வருண், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் பப்பி என்ற நகைச்சுவை படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை முரட்டு சிங்கிள் இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

படத்தின் போஸ்டரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தா சாமியாரின் படமும் இன்னொரு பக்கத்தில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படமும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்துக்கள் மனதை புண் படுத்தும் வகையிலும், இளைஞர்கள் மனதில் வக்கிர எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலும் போஸ்டர் உள்ளது என்றும், எனவே படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் படக்குழுவினருக்கு நித்யானந்தா சாமியார் சார்பிலும், தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதாக நோட்டீசில் அவர் குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கு படக்குழுவினர் அனுப்பும் பதில் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com