அமீர்கான் பற்றி ''கூலி'' பட நடிகை மோனிஷா பேச்சு

''கூலி'' படத்தில் சத்யராஜின் மகள்களில் ஒருவராக நடித்திருந்தார் மோனிஷா.
சென்னை,
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ''கூலி'' படத்தில் சத்யராஜின் மகள்களில் ஒருவராக நடித்திருந்த மோனிஷா, அப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த அமீர்கானுடன் பேசியது பற்றி வெளிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், "ரஜினிகாந்த் சார், உபேந்திரா சார் மற்றும் அமீர் கான் சார் ஆகியோருடன் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நான் பொதுவாக கூச்ச சுபாவமுள்ள ஒரு நபர். நானே யாரையும் அணுகிபேசமாட்டேன். அதனால் உபேந்திரா சாருடன் அமீர் கான் சாருடனும் பேச எனக்கு தைரியம் வரவில்லை.
ஆனால் அமீர்கான் சார் அவரே தானாக வந்து என்னிடம் பேசினார். உன் பெயர் என்ன என்று கேட்டார். நான் அவரிடம் என் பெயரைச் சொன்னேன், அவருடைய ரசிகை என்றும் சொன்னேன் " என்றார்.
Related Tags :
Next Story






