'கூலி' படம்: மறு தணிக்கை செய்யப்பட்டு 4 நிமிட காட்சிகள் நீக்கம்

சிங்கப்பூரில் கூலி படத்தை மறுதணிக்கை செய்து 4 நிமிட காட்சியை நீக்கியுள்ளனர்.
சென்னை,
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
‘கூலி’ படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்த கேஜிஎப், பீஸ்ட் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூலி திரைப்படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூரில் கூலி படத்தை மறுதணிக்கை செய்யப்பட்டு அதிலிருந்து 4 நிமிட காட்சியை படக்குழுவின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளனர். அதன்படி, பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. இது போல் உலகம் முழுவதும் அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






