கூலி படம்: 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
கூலி படம்: 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்றுமுன்தினம் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கூலி திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியுள்ளது.

கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு இருந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த வகையில், 2 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி படம் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com