வெளியானது ''கூலி'' பட அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்


coolie update at 6 PM today
x
தினத்தந்தி 23 Jun 2025 12:19 PM IST (Updated: 23 Jun 2025 6:31 PM IST)
t-max-icont-min-icon

இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார்.

சென்னை,

கூலி படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும், இப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய வியாபாரம் சுமார் 500 கோடி ரூபாயை எட்டக்கூடும் என்றும், இது தமிழ் சினிமாவின் அதிகபட்ச ரிலீஸுக்கு முந்தைய வியாபாரமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இது படத்தின் முதல் பாடல் குறித்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார்.

1 More update

Next Story