

புதுடெல்லி,
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள காப்புரிமை வழக்கில் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடரும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட திரைப்படங்களின் 134 பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் காப்புரிமை தொடர்பாக, சரிகமா நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் உரிமை சரிகமா நிறுவனத்துக்கே சொந்தமானது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, வழக்கு இறுதி முடிவுக்கு வரும் வரை சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளை இளையராஜா பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த இடைக்காலத் தடையை ரத்து செய்யக் கோரி இளையராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், கோர்ட்டு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க முடியாது என்றும், அந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.