காப்பிரைட்ஸ் விவகாரம் - இசையமைப்பாளர் தேவாவின் அதிரடி அறிவிப்பு


Copyright issue - Music composer Devas dramatic announcement
x

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.

சென்னை,

தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா.

தற்போதும் இவருடைய பாடல்கள் படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும்நிலையில், தன்னுடைய பாடல்களை பயன்படுத்தினால் அதற்காக காப்பி ரைட்ஸ் கேட்கப்போவதில்லை என இசையமைப்பாளர் தேவா தெரிவித்திருக்கிறார்.

ஊடகம் ஒன்றில் பேசிய அவர் , என்னுடைய பாடல்களை தற்போதுள்ள இயக்குனர்கள் அவர்களது படங்களில் பயன்படுத்துவதால் இளம் தலைமுறை ரசிகர்களுடன் தான் இணைந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய பாடல்களை 2கே கிட்ஸ் ரசிப்பதே தனக்கு போதும் என்றும் அந்த ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது என்றும் தேவா தெரிவித்திருக்கிறார்.


1 More update

Next Story