

சென்னை,
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் பரவி வருகின்றன. தமிழகத்திலும் தினமும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சமீப நாட்களாக பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் திரை துறையிலும் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் கடந்த 7ந்தேதி கொரானா தொற்றுக்கு ஆளானார். இதனையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின், குணமடைந்தார். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்ற பின், அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.