

சென்னை,
நாட்டில் கொரோனா பாதிப்புகளால் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், கொரோனா 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதில் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட தொரட்டி என்ற தமிழ் திரைப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான ஷமன் மித்ரு தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.