கொரோனா நிவாரணம்; நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.1 கோடி உதவி

தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
கொரோனா நிவாரணம்; நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.1 கோடி உதவி
Published on

சமீபத்தில் அக்ஷய்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்

மீண்டார்.நாடே, கொரோனாவால் போராடி வரும் நிலையில் அக்ஷய்குமார் கொரோனா நிவாரண உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகிறார். கடந்த வருடம் கொரோனா தொற்று ஆரம்பித்ததும் பிரதமர் நரேந்திரமோடி கொரோனாவை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, அக்ஷய்குமார் ரூ.25 கோடி நன்கொடை வழங்கினார். திரைப்பட தொழிலாளர்களுக்கும் உதவிகள் வழங்கினார்.

தற்போது கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ள நிலையில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். தேவைப்படுபவர்களுக்கு உனவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய்குமாருக்கு நன்றி என்று கவுதம் கம்பீர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அக்ஷய்குமார் என்னால் உதவ முடிந்ததற்கு நன்றி. இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com