கொரோனா அச்சுறுத்தல்: ரசிகர்களுக்கு ஜெயம்ரவி வேண்டுகோள்

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் ஜெயம்ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா அச்சுறுத்தல்: ரசிகர்களுக்கு ஜெயம்ரவி வேண்டுகோள்
Published on

இன்னும் சில நாட்களில் வரப்போகும் எனது பிறந்த நாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளை சிறப்படைய செய்கிறது. ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பி கேட்டுக்கொள்வதெல்லாம் கொண்டாட்டங்களையும், கூட்டமாய் சேர்வதையும் தவிர்த்து விடுங்கள். நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும்தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறோனோ அப்படி நீங்களும் உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் இந்த தொற்றை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com