'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா
Published on

தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் விஷால் ஜோடியாக ஆக்ஷன் படத்தில் அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே நடிகர்கள் அமீர்கான், அக்ஷய்குமார், மாதவன், நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனாவில் சிக்குவது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com