கொரோனா சிகிச்சை: குணமடைந்த நடிகர் சூர்யா வீடு திரும்பினார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடிகர் சூர்யா கடந்த 7-ம் தேதி தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அவரது தம்பி நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், அண்ணன் சூர்யா வீடு திரும்பிவிட்டார். எல்லோரும் நலமாக இருக்கிறோம். இன்னும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com