கொரோனா பாதிப்பு: 6 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றிய நடிகர் உயிரிழப்பு

6 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றிய பழம்பெரும் நடிகர் ரெமி ஜூலியன் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளார்.
கொரோனா பாதிப்பு: 6 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றிய நடிகர் உயிரிழப்பு
Published on

பாரீஸ்,

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் காட்சிகள் நிறைந்திருக்கும். அதிரடி சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். இதனை காண்பதற்காக தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நடிகர் ரெமி ஜூலியன். இவர் 6 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றி உள்ளார்.

இதுதவிர 1,400க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் டி.வி. விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 90 வயது முதிர்ந்த பழம்பெரும் நடிகரான அவருக்கு நடப்பு ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மொன்டார்கிஸ் நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் காலமானார். இதனை அவரது நண்பர் மற்றும் எம்.பி.யான ஜீன் பியரி டோர் உறுதி செய்துள்ளார்.

தனது 50 ஆண்டு கால திரை பயணத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் நாயகர்களான சீன் கானரி, ரோஜர் மூர் மற்றும் பிரெஞ்சு நடிகர்களான மொன்டான்ட், டிலோன் ஆகியோருக்கு பதிலாக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். கார் சேசிங், மோட்டார் பைக் மற்றும் ஹெலிகாப்டர் சாகசம் நிறைந்த காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com