மாநகராட்சி நோட்டீஸ்: நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி

மும்பை மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து நீதிமன்றத்தில் நடிகர் சோனு சூட் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மாநகராட்சி நோட்டீஸ்: நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி
Published on

மும்பை,

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். இவருக்கு மும்பை ஜுஹூ பகுதியில் 6 மாடிகள் கொண்ட ஓட்டல் உள்ளது. இது குடியிருப்பு பகுதி என்றும், அனுமதி இல்லாமல் ஓட்டலாக மாற்றி விட்டார் என்றும் மும்பை மாநகராட்சி குற்றம் சாட்டியது. ஓட்டலை இடிக்கும் நடவடிக்கையாக சோனு சூட்டுக்கு நோட்டீசும் அனுப்பியது.

இதை எதிர்த்து சோனுசூட் மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து மும்பை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி சார்பில் வாதாடிய வக்கீல் குடியிருப்பு பகுதியை சோனுசூட் 24 அறைகள் கொண்ட ஓட்டலாக மாற்றி இருக்கிறார். இது சட்டவிரோதமானது என்றார். இதையடுத்து சட்டப்படி நடப்பவர்களுக்கே கோர்ட்டு உதவி செய்யும். இந்த பிரச்சினை தொடர்பாக மாநகராட்சியை அணுகலாம் என்று கூறி சோனுசூட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com