

சென்னை ,
உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கவுரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 97-ஆவது ஆஸ்கா விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தேவாகியுள்ளது.
மொத்தம் 29 திரைப்படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் ஹிந்தி திரைப்படங்கள் லாபதா லேடீஸ், ஸ்ரீகாந்த், தமிழில் வாழை, தங்கலான், மலையாளத்தில் உள்ளொழுக்கு ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்தன. இந்நிலையில், அஸ்ஸாம் திரைப்பட இயக்குநா ஜானு பருவா தலைமையிலான 13 பே கொண்ட தேவுக் குழு, ஆஸ்கா பரிந்துரைக்கு லாபதா லேடீஸ் திரைப்படத்தை ஒரு மனதாக தேவு செய்துள்ளது.
ஆல் வி இமேஜின் அஸ் லைட், உள்ளொழுக்கு, ஆட்டம், ஆடு ஜீவிதம் ஆகிய மலையாளப்படங்களும் பரிசீலிக்கப்பட்டன. இந்த நிலையில் இயக்குநர் வசந்தபாலன் லாபத்தா லேடீஸை விட இந்த திரைப்படங்களை அனுப்பியிருக்கலாம் எனத் தனது கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "லாபத்தா லேடீஸ் இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு ( feel good drama) திரைப்படம். ஆனால் அதை விட தமிழில் வெளியான கொட்டுக்காளி, மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம் போன்ற படங்களை இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதிற்க்கு அனுப்பியிருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.