கோர்ட்டில் வழக்கு: நடிகை பவித்ரா - நரேஷ் படம் ஓ.டி.டியில் இருந்து நீக்கம்

கோர்ட்டில் வழக்கு: நடிகை பவித்ரா - நரேஷ் படம் ஓ.டி.டியில் இருந்து நீக்கம்
Published on

தமிழில் கவுரவம், அயோக்யா, கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் 63 வயது தெலுங்கு நடிகர் நரேஷை காதலித்தார். இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

தன்னை சட்ட ரீதியாக விவாகரத்து செய்யாமல் பவித்ராவை நரேஷ் 4-வது திருமணம் செய்து இருப்பதாக அவரது 3-வது மனைவி ரம்யா குற்றம் சாட்டினார். ஓட்டலில் தங்கி இருந்த இருவரையும் அவர் செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவமும் பரபரப்பானது.

இந்த நிலையில் பவித்ராவும், நரேசும் இணைந்து நடித்த 'மல்லி பெல்லி' படம் கடந்த மே மாதம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் அவர்களின் காதல் உண்மை சம்பவங்களை படமாக்கி இருந்தனர். ஆனாலும் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து பிரபல ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டனர். மல்லி பெல்லி படத்தில் தன்னை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாகவும், எனவே ஓ.டி.டியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி நரேசின் 3-வது மனைவியான ரம்யா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த சர்ச்சை காரணமாக ஓ.டி.டி தளத்தில் இருந்து மல்லி பெல்லி படம் நீக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com