விரிசல் விடும் படகு... பசியோடு சுத்தும் சுறா... கவனம் ஈர்க்கும் யோகி பாபுவின் 'போட்' பட டீசர்...!

இயக்குனர் சிம்பு தேவன் 7 ஆண்டுகளுக்கு பிறகு ‘போட்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
விரிசல் விடும் படகு... பசியோடு சுத்தும் சுறா... கவனம் ஈர்க்கும் யோகி பாபுவின் 'போட்' பட டீசர்...!
Published on

சென்னை,

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் சிம்பு தேவன். இவர் அதன்பிறகு புலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களையும் கசடதபற, விக்டிம் ஆகிய அந்தாலஜி தொடர்களையும் இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். புலி படத்திற்கு பிறகு திரைப்படங்கள் இயக்காமல் அந்தாலஜி தொடர்களை இயக்கி வந்த சிம்பு தேவன் 7 ஆண்டுகளுக்கு பிறகு 'போட்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக யோகி பாபுவும், கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. போரில் இருந்து தப்பித்து 10 பேர் படகில் செல்கின்றனர். அப்போது திடீரென படகு விரிசல் விடுகிறது இதனால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.

மேலும் அந்த படகை பசியொடு சுறா ஒன்று சுற்றுகிறது. இதுபோன்ற பரபரப்பான காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளதால் இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக படம் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

கவனம் ஈர்க்கும் போட் பட டீசர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com