“கிறிஸ்டினா கதிர்வேலன்” படத்தின் வீடியோ பாடல் வெளியீடு

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Published on

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் பேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் கிறிஸ்டினா கதிர்வேலன் திரைப்படத்தை எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன், ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம்' கவுஷிக் ராம் நாயகனாக நடிக்க, 'கொண்டல்' மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன், கல்லூரியில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை நாயகன் ஒரு தலையாக காதலிக்க, சக மாணவியான மிகவும் சக்திவாய்ந்த ஒருவரின் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நாயகனும் நாயகியும் இணைய, அது நாயகன்-நாயகியின் வாழ்வையே புரட்டிப்போட என 'கிறிஸ்டினா கதிர்வேலன்' விறுவிறுப்பாக செல்லும். கெளஷிக் ராம், படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு கிராமத்து கதிர்வேலன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி பிரதிபாவின் அசாத்திய நடிப்பும், உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதமும் குழுவினரின் பாராட்டுகளை அள்ளியது. அயோத்தி' திரைப்படத்தின் பின்னணி இசையை போன்று 'கிறிஸ்டினா கதிர்வேலன்' பின்னணி இசையையும் மக்கள் கொண்டாடுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கிறிஸ்டினா கதிர்வேலன் திரைப்படத்திலிருந்து என்னை விட்டு நீ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com