

மும்பை,
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற பிறகு, கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக நடிகை சேத்னா பாண்டே தெரிவித்துள்ளார்.
1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்த சேத்னா பாண்டே, 'தில்வாலே' (2015), 'முன்னா மைக்கேல்' (2017) உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். திரைப்படங்களுடன், சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற பிறகு சமூக வலைதளங்களில் வந்த டிரோல்கள் மற்றும் விமர்சனங்கள் தன்னை மனரீதியாக மிகவும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேத்னா பாண்டே கூறியதாவது:
என்றார்.
ஹாண்டெட் 3டி: எக்கோஸ் ஆப் தி பாஸ்ட்
தற்போது, இயக்குனர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாண்டெட் 3டி: எக்கோஸ் ஆப் தி பாஸ்ட்' திரைப்படத்தில் சேத்னா பாண்டே நடித்துள்ளார். கடந்த 12-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.