“விமர்சனங்களே வளர்ச்சிக்கான படிக்கட்டுகள்!”- நடிகை மாளவிகா மோகனன் சுவாரஸ்ய பேச்சு

நடிகை மாளவிகா மோகனனிடம், 'உங்களை நோக்கி வரும் விமர்சனங்களை எளிதாக எடுத்துக்கொள்கிறீர்களே... எப்படி?' என்று கேட்கப்பட்டது.
“விமர்சனங்களே வளர்ச்சிக்கான படிக்கட்டுகள்!”- நடிகை மாளவிகா மோகனன் சுவாரஸ்ய பேச்சு
Published on

'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடம், இந்தி மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக 'பாக் கெட் நாவல்' படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் வயதான நடிகர்களுடன் மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்து நடித்தது சர்ச்சையானது. பல்வேறு கமெண்ட்டுகளும் வீசப்பட்டன. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாளவிகா மோகனனிடம், 'உங்களை நோக்கி வரும் விமர்சனங்களை எளிதாக எடுத்துக்கொள்கிறீர்களே... எப்படி?' என்று கேட்கப்பட்டது.

"சினிமாவில் விமர்சனங்களும், ஏச்சு பேச்சுகளும் வருவது சகஜமே. விமர்சனங்கள் வந்தால் வளருகிறோம் என்று அர்த்தம். எனவே என்னை நோக்கி வீசப்படும் அம்புகளை, என் வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாகவே பார்க்கிறேன். எதையும் எளிதாக கடந்து சென்றாலே போதும், எந்த பிரச்சினைகளும் வராது”, என்று அவர் பதிலளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com