ஆடம்பர கார்களை வாங்கிய விவகாரம்: நடிகர் துல்கர் சல்மானிடம் மீண்டும் விசாரிக்க சுங்கத்துறை முடிவு

பூட்டானில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கார்களை நடிகர் துல்கர் சல்மான் வாங்கியது தெரியவந்தது.
ஆடம்பர கார்களை வாங்கிய விவகாரம்: நடிகர் துல்கர் சல்மானிடம் மீண்டும் விசாரிக்க சுங்கத்துறை முடிவு
Published on

சென்னை,

வரி ஏய்ப்பு

பூட்டான் நாட்டில் இருந்து ஆடம்பர கார்கள் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டு, வரி ஏய்ப்பு செய்து போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்து விற்பனை செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆபரேஷன் நும்கூர் என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் பூட்டானில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கார்களை மலையாள பிரபல நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் வாங்கியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து, அதிக விலைக்கு கார்களை விற்றது சுங்கத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 6-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மீண்டும் விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் துல்கர் சல்மானிடம் கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் கட்ட விசாரணை நடந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னிடம் பறிமுதல் செய்த கார்களை சட்டப்படி வாங்கியதாகவும், இந்த கார்கள் பூட்டான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியாது என்றும் விசாரணையின் போது சுங்கத்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை சுங்கத்துறையினர் ஏற்கவில்லை என தெரிகிறது. அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சுங்கத்துறையி னர் முடிவு செய்துள்ளனர். மேலும் கடத்தல் கார்களை வாங் கிய உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்ட மிட்டு உள்ளனர். நடிகர் துல்கர் சல்மான் பெயரில் கூடுதல் கார்கள் உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கார்கள் எங்கு உள்ளது என்பதை கண்டறிய முயற்சித்து வருகின்றனர். இதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் சுங்கத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com