தாதா சாகேப் பால்கே விருது: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - ரஜினிகாந்த்

“தாதா சாகேப் பால்கே விருதை ”என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருது: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - ரஜினிகாந்த்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார். தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெரும் மூன்றாவது நபர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் கே.பாலச்சந்தர் சார் அவர்களுக்கும் , என்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும் , என்னுடைய நண்பர் ராஜ் பகதூர் அவர்களுக்கும், என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் ,விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ,பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com