'பறந்து போ' படத்தின் 'டாடி ரொம்ப பாவம்' பாடல் வெளியீடு

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
'பறந்து போ' படத்தின் 'டாடி ரொம்ப பாவம்' பாடல் வெளியீடு
Published on

சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டாடி ரொம்ப பாவம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com