''ஜூனியர்'' - 'வைரல் வய்யாரி'யில் கலக்கும் ஸ்ரீலீலா

இப்படம் வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தற்போது இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும், தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திலும், தெலுங்கில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ''மாஸ் ஜாதரா'' படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஸ்ரீலீலா, ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் 'ஜூனியர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக கிரீத்தி ரெட்டி நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் 'வைரல் வய்யாரி' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதில், நடனத்தில் ஸ்ரீலீலா கலக்கி இருக்கிறார்.
Related Tags :
Next Story