டேனியல் பாலாஜி மரணம் - நடிகர் அதர்வா உருக்கம்

நடிகர் அதர்வா தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
image courtecy:twitter@Atharvaamurali
image courtecy:twitter@Atharvaamurali
Published on

சென்னை,

கமல்ஹாசன் கதாநாயகராக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க, பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அதர்வா தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

நாம் ஒன்றாக இன்னும் அதிக நேரம் செலவிட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ரெஸ்ட் இன் பீஸ் பாலாஜி சித்தப்பா. என்று உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com