ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு கொரோனா தொற்று

ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு கொரோனா தொற்று
Published on

பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். டேனியல் கிரேக் 5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை கடந்த வருடம் வெளியானது. இது ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படமாகும்.

இந்நிலையில், டேனியல் கிரேக்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு உள்ளான நியூயார்க்கின் பிராட்வே நாடக குழுவுக்கு உதவ, டேனியல் கிரேக் நாடகங்களில் நடித்து வந்தார். ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகத்தில் அவர் நடிக்க இருந்த நிலையில், நாடகம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக, டேனியல் கிரேக்குக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நாடகம் ரத்து செய்யப்பட்டது.

டேனியல் கிரேக் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். நாடகம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக டேனியல் கிரேக் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com